Published : 28 Aug 2014 10:56 AM
Last Updated : 28 Aug 2014 10:56 AM

புற்றுநோய் மருத்துவமனையை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: பரிதவிக்கும் நோயாளிகள்

‘‘வேலூரில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்துகளை அண்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் முன்பு நிறுத்தாமல், தனியார் மருத்துவக் கல்லூரி வாசல் முன்பு நிறுத்துகின்றனர்’’ என ‘தி இந்து உங்கள் குரல்’ தொலை பேசியில் வேலூர் மாவட்டம் மேல் விஷாரத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘எனது அம்மா கடந்த 6 ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக மாதந்தோறும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு பேருந்தில் சென்று வருகிறோம். சில மாதங்களாக வேலூரில் இருந்து செல்லும் அரசுப் பேருந்துகள் அண்ணா புற்று நோய் சிகிச்சை மையத்தின் முன் பாக நிற்பதில்லை. சற்றுத் தொலை வில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி முன்பு நிறுத்துகின்றனர்.

என்னைப் போன்றவர்கள் நடந்துகூட சென்றுவிடலாம். நோய் வாய்ப்பட்ட வயதானவர்கள் அவ்வ ளவு தூரம் நடந்து செல்ல முடிய வில்லை. இதற்காக ஆட்டோவில் சென்றால் ஒருவருக்கு தலா ரூ.10 கட்டணம் கேட்கிறார்கள்.

மீண்டும் பேருந்து ஏறுவதற்கு ஆட்டோ கட்டணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரி வரை செல்ல வேண்டும். ஒரு சில மனிதநேயமிக்க ஓட்டுநர்கள், புற்று நோயாளிகள் யாராவது இருந்தால் அண்ணா புற்று நோய் சிகிச்சை மையம் முன்பு நிறுத்து கிறார்கள்.

ஏழைகளான நாங் கள் அரசுப் பேருந்தில்தான் பயணம் செய்ய முடியும். வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களைச் சேர்ந் தவர்களும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பலரும் சிகிச்சைக்காக காஞ்சிபுரத்துக்கு வருகிறார்கள். அரசுப் போக்குவரத்துக்கழக அதி காரிகள் ஏழைகளின் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து, வேலூர் மண் டல அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் செல்வ நாயகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

அவர் கூறும்போது, ‘‘அரசுப் பேருந்துகள் தனியார் மருத்துவக் கல்லூரி அருகில் நின்று செல்ல அனுமதி உள்ளது. அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் அண்ணா புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்படுகிறது. அங்கு பேருந்து நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x