4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி, பாலியல் நோய்களுக்கு இலவச சிகிச்சை

4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி, பாலியல் நோய்களுக்கு இலவச சிகிச்சை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 4 தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் எச்​ஐவி - எய்ட்ஸ் மற்​றும் பால்​வினை நோய்களுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை வழங்​கப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரிவித்தார்.

சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நேற்று நடந்த நிகழ்​வில், தமிழ்​நாடு மாநில எய்ட்ஸ் கட்​டுப்​பாட்டு சங்​கம் சார்​பில், எச்​ஐவி - எய்ட்ஸ் மற்​றும் பால்​வினை நோய் தொற்று குறித்த தீவிர விழிப்​ புணர்வு பிரச்​சா​ரத்தை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் எச்​ஐவி - எய்ட்ஸ் மற்​றும் பால்​வினை நோய் பாதிப்​பு​களால் 1.39 லட்​சம் பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். தேசிய அளவில் எச்​ஐவி பாதிப்​புக்கு உள்​ளானவர்​களின் எண்​ணிக்கை 0.23 சதவீதம். தமிழகத்​தில் கடந்த 2010-ல் 0.38 சதவீத​மாக இருந்த எச்​ஐவி பாதிப்பு தற்​போது 0.16 சதவீத​மாக குறைந்​துள்​ளது.

தமிழகத்​தில் உள்ள தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் எச்​ஐவி - எய்ட்ஸ் மற்​றும் பால்​வினை நோய்​களுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. முதல்​கட்​ட​மாக, 4 தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள் இந்த திட்​டத்​தில் இணைந்​துள்​ளன.

அதன்​படி, மேல்​மரு​வத்​தூர் ஆதிப​ராசக்​தி, கன்​னி​யாகுமரி மெடிக்​கல் மிஷன், ஈரோடு நந்​தா, திரு​வள்​ளுர் ஸ்ரீவெங்​கடேஸ்​வரா ஆகிய 4 தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் இலவச சிகிச்சை தற்​போது தொடங்கி வைக்​கப்​படு​கிறது.

அந்த கல்​லூரி நிர்​வாகங்​களுக்கு இதற்​கான ஆணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. ஏற்​கெனவே, 11 கல்​லூரி​களில் எச்​ஐவி விழிப்​புணர்​வுக்​கான செஞ்​சுருள் சங்​கம் தொடங்​கப்​பட்ட நிலை​யில், தற்​போது 20 கல்​லூரி​களில் தொடங்​கப்​பட்​டுள்​ளன. அதே​போல, 11 பள்​ளி​களில் வாழ்​வியல் திறன் கல்வி பயிற்சி திட்​டம் தொடங்​கப்​பட்ட நிலை​யில், தற்​போது 30 பள்​ளி​களில் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

மருத்​து​வ​மனைக்கு வருபவர்​களை நோயாளி​கள் என்​ப​தற்கு பதிலாக, மருத்​து​வப் பயனாளர்​கள் என அழைக்க வேண்​டும் என்று முதல்​வர் அறி​வித்​தார். இதற்​கான அரசாணை ஓரிரு நாளில் வெளி​யிடப்பட உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்நிகழ்வில், சென்னை மாநக​ராட்சி துணை மேயர் மகேஷ்கு​மார், சுகா​தா​ரத் துறை செயலர் செந்​தில்​கு​மார், திட்ட இயக்​குநர் ஆர்​.சீ​தாலட்​சுமி, பொது சுகா​தா​ரத் துறை இயக்​குநர் சோமசுந்​தரம், மருத்​து​வக் கல்வி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, நகர நல அலு​வலர் ஜெகதீசன் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி டீன்​கள், பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள்​ கலந்​து கொண்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in