Last Updated : 02 Jul, 2018 08:31 AM

 

Published : 02 Jul 2018 08:31 AM
Last Updated : 02 Jul 2018 08:31 AM

மதுரை அரசு மருத்துவமனை ‘இராசாசி’ என்ற பெயரில் இருந்து ‘இராஜாஜி’யாக மாறுகிறது

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை பெயர் பலகையில் உள்ள எழுத்துகளை மாற்றுவதற்காக ஒன்றரை ஆண்டாக நடைபெற்ற போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் ஆர்.லெட்சுமிநாராயணன். வழக்கறிஞரான இவர் பாரதியார் சிந்தனை மன்றத்தின் செயலராகவும் உள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் 4 இடங்களில் உள்ள பெயர் பலகைகளில் ‘இராசாசி’ என்று இருப்பதை ‘இராஜாஜி’ என மாற்றக் கோரி ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கத் தொடங்கினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை டீன், ஆய்வுக்காக மதுரைக்கு வந்திருந்த தமிழக ஆளுநர் ஆகியோரிடமும் மனு அளித்தார்.

இராஜாஜி பிறந்த தொரப்பள்ளியில் அவரது வீட்டில் வைத்திருக்கும் பெயர் பலகையில் இராஜாஜி என எழுதியிருப்பதையும், சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், சென்னை மாகாணப் பிரீமியர், மேற்கு வங்க ஆளுநர், சென்னை மாகாண முதல்வர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ஆகிய பதவிகளை அலங்கரித்த இராஜாஜி பெயரை அனைத்து இடங்களிலும் ஒன்றாகவே குறிப்பிட வேண்டும் என்றும் ஆளுநரை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் அரசு மருத்துவமனை பெயரில் இராசாசி என்றிருப்பதை இராஜாஜி என மாற்றம் செய்யுமாறு பொதுப்பணி செயற்பொறியாளருக்கு மதுரை அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், அரசு மருத்துவமனையின் பெயர் பலகையில் திருத்தம் செய்து அரசு இராஜாஜி மருத்துவமனை என்று சரியான பெயர் பலகை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு டீன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x