Published : 21 Jul 2018 12:53 PM
Last Updated : 21 Jul 2018 12:53 PM

மக்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

 மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அரசுக்கு ஆதரவாக அதிமுக  வாக்களித்ததை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை முதல்முதலாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்ற 451 உறுப்பினர்களில், 126 உறுப்பினர்கள் அரசுக்கு எதிராகவும், 325 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியான அதிமுக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இந்நிலையில், அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் விவகாரம், 15-வது நிதி ஆணையம், இந்தி திணிப்பு, வகுப்புவாத அரசியல் ஆகியவற்றுக்கு எதற்காக அதிமுக அடிபணிந்தது என்பது, தற்போது பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலம் தெளிவாகிறது. இதன்மூலம், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் தங்களது குறிக்கோளை அடைந்துள்ளனர்” என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x