Published : 25 Jul 2018 07:21 AM
Last Updated : 25 Jul 2018 07:21 AM

லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: தமிழக தலைவர்கள் வலியுறுத்தல்

லாரி உரிமையாளர்கள் போராட் டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

சுங்கக்கட்டண சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மேற் கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடிப்பதால், மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நாடு முழுவதும் காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு்கூட கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  எனவே, மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் சரக்கு லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசிி இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்

லாரி உரிமையாளர்கள்  வேலை நிறுத்தம் காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

இதன் விளைவாக கட்டுமானப் பொருட்கள், காய்கறிகள், கனிகள், தேங்காய், உணவுப் பொருட்கள், பூ உள்ளிட்ட அனைத்துக்கும் தட்டுப்பாடு, விலை உயர்வு ஏற்பட்டுள்ளன. மத்திய அரசு இனியும் காலம் கடத்தாது, உடனடியாக லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கு தீர்வு காண முன் வரவேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

லாரி உரிமையாளர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். பிற மாநிலங் களிலிருந்து தமிழகம் வர வேண்டிய லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அரிசி, பருப்பு, காய்கறி உள்

ளிட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகளும் உயர்ந்துள்ளன.

எனவே உடனடியாக லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x