‘எம்புரான்’ திரைப்படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்: பேரவையில் முதல்வர் தகவல்

‘எம்புரான்’ திரைப்படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்: பேரவையில் முதல்வர் தகவல்
Updated on
1 min read

எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

‘எம்புரான்’ திரைப்பட காட்சிகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தவாக தலைவர் வேல்முருகன் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசியபோது, ‘‘முல்லை பெரியாறு அணை பேராபத்தை விளைவிக்கக்கூடியது. அந்த அணை உடைந்தால் கேரளா அழியும் என்பது போன்ற காட்சி, தற்போது திரையிடப்பட்டுள்ள ‘எம்புரான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை எதிர்த்து ஏராளமான விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்’’ என்றார்.

அதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘எம்புரான் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை என்றாலும், அதை பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும்போது கோபமும், பயமும் வருகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை திரைப்படத்தில் பதிவு செய்திருந்தால், அது தேவையற்றது’’ என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘அந்த திரைப்படம் வெளியான பிறகு, திரைப்படத்தில் முல்லை பெரியாறு தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in