Published : 25 Jul 2018 08:39 AM
Last Updated : 25 Jul 2018 08:39 AM

காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தல் 

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 78 ஆயிரத்து 270 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் படுகிறது. இதனால் காவிரி கரை யோர பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதற் கான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மற்றும் தமிழக அரசு மேற் கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘முதல்வர் உத்தரவின்படி கடந்த 19-ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக காவிரி நீர் திறந்து விடப்பட்டு, 22-ம் தேதி கல்ல ணையை வந்தடைந்தது. அங்கி ருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரியின் அனைத்து கிளை நதிகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகி, அணை யின் முழு கொள்ளளவை தாண்டிவிட்டதால் இன்று (செவ் வாய்க்கிழமை) காலை முதல் விநா டிக்கு 78 ஆயிரத்து 270 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

காவிரி கரையோர மாவட்டங் களான தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் அனைவரும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் தண்ணீர் வெளியேற்றும்போது நீச்சல், மீன்பிடித்தல், பிற பொழுதுபோக்கு போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அணைகளில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்படும் போது தாழ்வான பகுதிக ளில் வாழும் மக்கள் பாதுகாப் பான இடங்களுக்கு செல்லு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ள னர். குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆற்றங்கரையில் அவர் கள் குளிக்கவோ, விளையா டவோ அனுமதிக்கக்கூடாது என்று பெற்றோர்களுக்கும், கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்க வேண்டும் என்று விவசாயி களுக்கும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை மக்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக தரை மட்ட பாலங்களில் எச்சரிக்கை பதாகைகள் அமைக்கும்படி உள்ளாட்சி அமைப்புகளை அறிவுறுத்தியுள்ளோம். பொது மக்கள் மத்தியில் எவ்வித பீதியும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ஆபத்து காலத்தில் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.6 அடியாகவும், கொள்ள ளவு 94.430 டிஎம்சி-யாகவும் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 75 ஆயிரத்து 170 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 78 ஆயிரத்து 270 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை யின் நீர்மட்டத்தை 120.2 அடிக்கு குறைப்பதற்காக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, நீர்வரத்து அளவைவிட அதிகமாக உள்ளது” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x