Published : 09 Aug 2014 11:18 AM
Last Updated : 09 Aug 2014 11:18 AM

கோயம்பேடு வியாபாரிகளிடம் கருத்து கேட்டார் மேயர்: வரி வசூலிப்பு விவகாரம்; ‘தி இந்து’ செய்தி எதிரொலி

சென்னை கோயம்பேடு மார்க் கெட்டில் உள்ள வியாபாரிகள் நீண்ட நாள்களாக வரி செலுத்தாதது தொடர்பாக அவர்களிடம் மேயர் சைதை துரைசாமி கருத்து கேட்டார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 3194 கடைகள் செயல் பட்டு வருகின்றன. அங்குள்ள வியா பாரிகள் பலர் கடந்த சில ஆண்டு களாக சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.7 கோடிக்கு மேல் வரி வருவாய் வரவேண்டியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’வில், கடந்த 3-ம் தேதி ‘கோயம்பேடு மார்க்கெட் கடைகளில் பல கோடி ரூபாய் வரி நிலுவை: வசூலிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை ரிப்பன் மாளிகைக்கு அழைத்து கருத்து கேட்டார்.

இந்த கூட்டத்தில் பூ வியாபாரி கள் சங்கச் செயலர் மூக்கையா பேசும்போது, “இது வரை வசூலிக் கப்படாமல் உள்ள வரி நிலுவையை தள்ளுபடி செய்ய வேண்டும். எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரியில், நாங்கள் சிஎம்டிஏ-வுக்கு செலுத்தி வரும் பராமரிப்பு கட்டணத்தை கழித்துக்கொண்டு மீதி தொகையை புதிய வரியாக நிர்ணயித்து வசூலிக்க வேண்டும்” என்றார்.

பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் சீனிவாசன் பேசும்போது, “கோயம்பேடு மார்க்கெட்டில் முதலில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் பேசும்போது,

“கோயம்பேடு மார்க்கெட்டை சிஎம்டிஏ சரியாக பராமரிக்க வில்லை. எனவே அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயம்பேடு மார்க்கெட் மாநகராட்சியிடம் ஒப்ப டைக்கப்பட வேண்டும்” என்றார்.

மேயரின் கருத்து கேட்பு கூட்டத்துக்கு பிறகு ‘தி இந்து’ நிருபரிடம் பேசிய உரிமம் பெற்ற காய்கறி வியாபாரிகள் பொதுநலச் சங்க செயலர் ஜெயராம் ஐயர், “இந்த கூட்டத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே பேச வாய்ப்பளிக்கப்பட்டது. நாங்கள் பேச வாய்ப்பளிக்கவில்லை. மார்க் கெட்டிற்கு எந்த வசதியையும் செய்து தராமல் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிப்பது தவறு” என்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, “முதலில் 25 சதவீதம் நிலுவை வரியை செலுத்துங்கள். பின்னர் உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுங்கள்.

இதை முதல்வர் ஜெயலலிதா வின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை செய்து தருகிறேன் என்று உறுதியளித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x