Published : 06 Jun 2018 08:45 AM
Last Updated : 06 Jun 2018 08:45 AM

இறக்குமதி மணலை விற்க தடை ஏன்?: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

தரமற்ற மணலால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக இறக்குமதி மண லை விற்க தனியாருக்கு தடை விதிப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று சட்டம், நீதி, சிறைச்சாலைகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய திமுக உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் (ஒரத்தநாடு), ‘‘இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க தமிழக அரசு தடை விதித்தது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் , ‘‘அனைவருக்கும் தரமான மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மணல் விற்பனையை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மணல் கட்டுமானத்துக்கு ஏற்றதா என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். தரமற்ற மணலை அனுமதித்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவேதான், இறக்குமதி மணலை விற்க தனியாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற் போது வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய மின்னணு டெண்டர் கோரப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x