Published : 03 Jun 2018 06:33 PM
Last Updated : 03 Jun 2018 06:33 PM

கருணாநிதி நீண்ட காலம் மகிழ்வுடன் வாழ வேண்டும்: ராகுல், மம்தா வாழ்த்து

திமுக தலைவர் கருணாநியின் 95-வது பிறந்த நாளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருணாநிதியின் பிறந்த நாளுக்கு தமிழக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்தி தன் ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டுகள் மகிழ்ச்சியின் வாழ வேண்டுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ''கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் மகிழ்வுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்'' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x