Published : 19 Jun 2018 09:28 AM
Last Updated : 19 Jun 2018 09:28 AM

கக்கனின் 103-வது பிறந்த நாள் கொண்டாட்டம் காங்கிரஸ், தமாகா நிர்வாகிகள் மரியாதை

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ், தமாகா தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

காமராஜர் ஆட்சியில் உள்துறை, பொதுப்பணி, விவசாயம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்த கக்கனின் 103-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட கக்கனின் உருவப் படத்துக்கு தமி ழக காங்கிரஸ் முன்னாள் தலை வர் குமரிஅனந்தன், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, எஸ்.சி. பிரிவு நிர்வாகி பி.வி. தமிழ்ச்செல்வன், மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தேனாம்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட கக்கன் உருவப் படத்துக்கு தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x