Published : 21 Aug 2014 11:49 AM
Last Updated : 21 Aug 2014 11:49 AM

அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது

சென்னை அண்ணா சாலையில் பிலிம் சேம்பர் அருகே 4 தளங்களைக் கொண்ட அம்பாள் ஹவுஸ் என்ற 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கட்டிடத்தில் ஐடி நிறுவனங்கள் இயங்கி வந்தன. அதன் பின்னர் யாரும் இல்லாத பாழடைந்த கட்டிடமாகவே இது இருந்தது. இந்த கட்டிடம் வலுவிழந்ததால் அதை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி கடைசி 2 தளங்கள் ஏற்கெனவே இடிக்கப்பட்டன. 2-வது தளத்தை இடிக்கும் பணிகள் புதன்கிழமை நடந்து வந்தது. 12 பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் கட்டிடத்தின் ஒரு பக்க சுவர் முழுவதும் இடிந்து சரிந்தது. அப்போது அதன் அருகே ஆட்கள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டிடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மட்டும் சேதம் அடைந்தன.

கட்டிடம் இடிந்ததாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்றனர். ஆனால் ஆட்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிந்ததும் அவர்கள் திரும்பி வந்து விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x