Published : 24 May 2018 09:47 AM
Last Updated : 24 May 2018 09:47 AM

பணியின்போது புகையிலிருந்து காத்துக்கொள்ள போக்குவரத்து போலீஸாருக்கு நவீன முகக்கவசம் விநியோகம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்

போக்குவரத்து போலீஸாருக்கு புகை மற்றும் தூசியில் இருந்து காத்துக்கொள்ள நவீன முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நவீன முகக்கவசங்களை வழங்கினார்.

வாகனங்கள் வெளியிடும் புகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸாரின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீஸாரின் உடல் நலத்தைக் காக்கும் வகையில் சென்னை யில் உள்ள போக்குவரத்து போலீஸாருக்கு புகை மற்றும் தூசியில் இருந்து காத்துக்கொள்ள நவீன முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நவீன முகக்கவசங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

``போக்குவரத்து போலீஸார் நாள் முழுவதும் வெயில் மற்றும் புழுதியில் பணி செய்யும் நிலை உள்ளது. இந்த நிலையிலும் தங்கள் உடல் நலத்தில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். போக்குவரத்து போலீஸார் பலர் புகை மற்றும் தூசியில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் நவீன சுவாச முகக்கவசத்தை அணிவது இல்லை. அதை அணிந்து பணி செய்ய வேண்டும்” என்றார்.

முன்னதாக மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸ் போக்கு வரத்து போலீஸாருக்கு நவீன முகக்கவசம் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையர் எஸ்.என். சேஷசாய், போக்குவரத்து இணை ஆணையர்கள் ஆர்.சுதாகர், நஞ்மல்கோடா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x