Published : 26 Aug 2014 08:54 AM
Last Updated : 26 Aug 2014 08:54 AM

ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம்: 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

ஆம்னி பஸ்களில் 20 முதல் 30 சத வீதம் வரை கட்டணத்தை உயர்த்த உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2,500க்கும் அதிகமான ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை யில் இருந்து மட்டும் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, பெங் களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 800 பஸ்கள் தினமும் இயக்கப் படுகின்றன. தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ் களில் பயணம் செய்கின்றனர்.

டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய பஸ் கட்ட ணத்தை உயர்த்த ஆம்னி பஸ் களின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஏ.சி. பஸ்களுக்கு 30 சதவீதமும், சொகுசு பஸ்களுக்கு 20 சதவீதமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் பர்வீனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:

டீசல் விலை, உதிரி பாகங்களின் விலை உயர்வு, அடிக்கடி உயரும் சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட காரணங்களாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆம்னி ஏ.சி. பஸ்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட் டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரையில் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஆம்னி பஸ் தொழில் பெரிதும் நலிவடைந்துள்ளது. ஒரு சில பெரிய நிறுவனங்களே தொழிலை நடத்த முடியாமல் பஸ் பர்மிட்டை சரண்டர் செய்து விட்டு செல்கின்றனர்.எனவே, பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இழப்பை சமாளிக்கும் வகை யில் ஏ.சி. பஸ்களுக்கு 30 சதவீத மும், சொகுசு பஸ்களுக்கு 20 சதவீதமும் கட்டணம் உயர்த்த திட்டமிட் டுள்ளோம். இதுபற்றி அடுத்த மாதத் தில் எங்கள் சங்கம் கூடி முடிவு செய்யும். கட்டணம் உயர்வு பற்றி தமிழக அரசிடம் முறையாக தெரிவித்த பிறகே, அதை அமல்படுத்துவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x