Published : 31 May 2018 10:10 AM
Last Updated : 31 May 2018 10:10 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வை, இதற்கு விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26 ஆயிரத்து 775 மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை வரும் வரும் 5-ம் தேதி www.cbseneet.nic.in இணையதளத்தில் வெளி யிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x