Published : 13 Aug 2014 09:30 AM
Last Updated : 13 Aug 2014 09:30 AM

‘ரெப்கோ வங்கியில் முறைகேடு நடக்கவில்லை’: வங்கி ஊழியர்கள் விளக்கம்

ரெப்கோ வங்கியில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று வங்கி ஊழியர்களும், உயர் அதி காரியும் விளக்கம் அளித்துள்ளனர்.

‘ரெப்கோ வங்கியில் முறைகேடு களா’ என்ற தலைப்பில் ‘தி இந்து’-வில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.

இதுதொடர்பாக ரெப்கோ வங்கி யின் இணை பொதுமேலாளர் ஏ.சுப்பையா வெளியிட்ட விளக்கம் வருமாறு: ‘எங்கள் வங்கி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம். வங்கியின் இயக்குநர் குழுவில் மத்திய அரசு மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர் களாக உள்ளனர். எங்கள் வங்கியின் தினசரி செயல்பாடுகள் கணக்கு தணிக்கையாளர்கள், விஜிலென்ஸ் அதிகாரிகள், வங்கி யாளர்கள் அடங்கிய நிபுணத் துவம் மிக்கக் குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த வங்கியின் ஊழியர்கள் 70 பேர் கையெழுத் திட்டு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘ரெப்கோ வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் மகிழ்ச்சியாக உள்ளோம். அனைவரும் நல்ல ஊக்கத்துடன் பணியாற்றி வருவ தால் வங்கி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. நிர்வாகத்துக்கு எதிராக ஊழியர்கள் புகார் தெரிவிக்க வாய்ப்பே கிடை யாது. ஓய்வுபெற்ற எந்த உயர் அதிகாரியோ, எந்த ஊழியரோ எங்கள் வங்கியில் பணியாற்றவில்லை. வங்கியின் இயக்குநர்கள் வாரியத்தின் முடிவின்படி ஊழியரின் ஓய்வு பெறும் வயது 62 ஆகும். வாரிய அளவிலான அதிகாரிகளுக்கு ஓய்வு வயது 62. இதில் எவ்வித விதிமுறை மீறலும் இல்லை. ஊக்க ஊதியத்தொகை, உயர் அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப் படுகிறது. இதில் எவ்விதமான முறைகேடும் நடக்கவில்லை’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x