அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதம்

அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதம்
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்துபேரவையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்தவிவகாரம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவை தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேரவையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து எழும்பூர்ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்புஅதிமுக எம்எல்ஏக்கள் இன்றுஉண்ணாவிரத போராட்டம்நடத்த உள்ளனர். இந்த போராட்டத்துக்கு அனுமதி கோரி போலீஸிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in