எல்ஐசி பிரீமியத்தை செலுத்துவதில் முறைகேடு இல்லை: மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம்

எல்ஐசி பிரீமியத்தை செலுத்துவதில் முறைகேடு இல்லை: மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் எல்ஐசி பிரீமியத்தை எல்ஐசி நிறுவனத்திடம் செலுத்துவதில் முறைகேடு எதுவும் இல்லை என்று மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை அண்ணாநகர் மாநகரபோக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றும் கே.துளசிதாஸ் என்பவர், சென்னை மாநகர காவல்ஆணையரகத்தில் புகார் ஒன்றுஅளித்திருந்தார். அதில், ‘‘என்னுடைய சம்பளப் பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட எல்ஐசி பிரீமியம் தொகை கடந்த 6 மாதங்களாக எல்ஐசி நிறுவனத்துக்கு செலுத்தப்படவில்லை.

இதேபோல போக்குவரத்துக் கழகத்தின் 15 ஆயிரம்தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பிரீமியம் தொகையும் செலுத்தப்படவில்லை. இதில்முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி யிருந்தார்.

இதுதொடர்பான செய்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 15-ம் தேதி வெளியாகியிருந்தது. இந்நிலையில், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் எல்ஐசி பிரீமியம் தொகையை செலுத்துவதில் எந்த முறைகேடும்இல்லை என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்திசை’ நாளிதழுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழக சம்பளப் பட்டியல் பிரிவின் மூலம் எல்ஐசி காப்பீடு செய்துள்ள பணியாளர்களுக்கு அவர்களின் எல்ஐசி பிரீமியம் தொகையை, அவர்களின்கோரிக்கைக்கு ஏற்ப சம்பளத்தில் பிடித்தம் செய்து, எல்ஐசி நிறுவனத்துக்கு காசோலை மூலம், அந்நிறுவனம் அளித்த காலஅவகாசத்துக் குள் கட்டப்படுகிறது. அதில் எந்த நிலுவையும் இல்லை.

இந்த நடைமுறை அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறே மாநகர போக்குவரத்துக் கழகத்திலும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in