தமிழகத்தில் ஏப்.11-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்.11-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 11-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் கடைபிடித்து வந்தனர். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

ரமலான் மாதத்தின் முதல் பிறையின் அடிப்படையில் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதேபோல் ரமலான் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும். இந்நிலையில், இன்று பிறை எதுவும் தென்படாததால், நாளை மறுதினம் (ஏப்.11) தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in