ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: பிறை தெரிந்ததால் ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். ரமலான் மாதத்தின் முதல் பிறையின் அடிப்படையில் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

அந்த வகையில், நேற்று பிறை தெரிந்ததால், இன்று (மார்ச் 12) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in