இயக்குநர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக என்சிபி நோட்டீஸ் @ போதைப் பொருள் வழக்கு

அமீர் | கோப்புப் படம்
அமீர் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: போதைப் பொருள் வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இயக்குநர் அமீருக்கு என்சிபி அதிகாரிகள் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (ஏப்.9) காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த 2-ம் தேதி இதே வழக்கு தொடர்பாக டெல்லி என்சிபி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர் அமீர். அப்போது அவரிடம் சுமார் 11 மணிநேரம் விசாரணை செய்யப்பட்டது.

இதன்பிறகு கடந்த 5-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமீருக்கு உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமீருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விசாரணைக்கு வரும்போது கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்திய வங்கி கணக்குகள், மூன்று ஆண்டுகளாக தன் குடும்பத்தின் பெயரில் வாங்கிய சொத்துகள் மற்றும் ஜாபர் சாதிக் உடன் தொழில் பார்ட்னராக இணைந்ததற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை அமீர் தாக்கல் செய்ய உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றை தயார் செய்ய கால அவகாசம் வேண்டும் என அமீர் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in