Published : 05 Apr 2024 05:45 AM
Last Updated : 05 Apr 2024 05:45 AM

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களைதமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசின் சொந்த வாகனங்களில் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் 19பேர் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் இலங்கையிலிருந்து சென்னை வந்தனர். மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர்என மொத்தம் 19 மீனவர்கள் கடந்தமார்ச் மாதம் 6-ம் தேதி இரு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நள்ளிரவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதுரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்தாக இரு படகுகள், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, 19 மீனவர்களையும் பிடித்து, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர். பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அவசரக் கடிதம் எழுதி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 19மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர், 19 மீனவர்களையும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் விமானம் மூலம், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால் அனைவருக்கும் தூதரக அதிகாரிகள் அவசரக்கால பயணச்சான்றிதழ்கள் வழங்கி, சென்னைவருவதற்கான விமான டிக்கெட்களையும் ஏற்பாடு செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து, சென்னைக்கு வரும்ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் நேற்று முன் தினம் இரவு 19தமிழக மீனவர்களும் சென்னைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.அதோடு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த, வாகனங்களில், மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x