Published : 21 Aug 2014 11:30 AM
Last Updated : 21 Aug 2014 11:30 AM

சிறுநீரக மோசடி டாக்டரின் சொத்துக்கள் முடக்கம்

சேலம், நாமக்கல், தருமபுரி உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட டாக்டரின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துக்களை போலீஸார் முடக்கி உள்ளனர்.

சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட சங்ககிரி யைச் சேர்ந்த அய்யாவு, பெரிய மணலியைச் சேர்ந்த சீனிவாசன், குமாரபாளையம் கோட்டைமேட் டைச் சேர்ந்த ஷாஜகான், சங்ககிரி கத்தேரியைச் சேர்ந்த வடிவேல் ஆகிய 4 புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் பணத் துக்காக சிறுநீரகம் தானம் கொடுக்க முன்வந்த பாப்பிரெட்டிப் பட்டி - மணியம்பாடியைச் சேர்ந்த பால சுப்பிரமணியம் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஏரியூர் தின்னபெல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், ’’எனது தந்தை சிறுநீரக கோளாறுக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, சிறுநீரகத் துறை டாக்டர் கணேசன், என் தந்தையின் சிறுநீரகத்தை மாற்ற வேண்டும் என்றார்.

மாற்று சிறுநீரகத்துக்காக டாக்டர் கணேசன் மூலம் புரோக்கர் அய்யாவுக்கு ரூ.1.5 லட்சம் கொடுத்தேன். அதற்குள் என் தந்தை இறந்துவிட, அவர்கள் பணத்தை திருப்பித் தரவில்லை’’ என்று புகாரில் தெரிவித்திருந் தார்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் டாக்டர் கணேசனை கடந்த ஆண்டு கைது செய்து விசாரித்தபோது, அவர் புரோக்கர்கள் மூலம் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஓர் ஆண்டாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையடுத்து, மாநில அளவில் சிறுநீரக மோசடி நடந்துள்ளதால், டாக்டர் கணேசனுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துக் களையும் பண சுழற்சி தடை சட்டத்தின் கீழ், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x