Published : 28 Mar 2024 09:44 AM
Last Updated : 28 Mar 2024 09:44 AM

அண்ணாமலை, ஆ.ராசா, எல்.முருகன் சொத்து விவரம்

கோவை/பொள்ளாச்சி/உதகை: கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர்கள் மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரம்:

அண்ணாமலை: (பாஜக, கோவை): கையிருப்பு ரொக்கம் ரூ.5.11 லட்சம். வங்கி இருப்பு ரூ.25,30,492. பங்குச் சந்தை முதலீடு ரூ.60 ஆயிரம். ரூ.5 லட்சம் மதிப்பிலான ஹோண்டா சிட்டி கார். ரூ.1.12 கோடி மதிப்புள்ள 62.73 ஏக்கர் விவசாய நிலம். மனைவி அகிலாவிடம் கையிருப்பு ரொக்கம் ரூ.1.56 லட்சம். வங்கி இருப்பு ரூ.1,14,73,275. பங்குச் சந்தை முதலீடு ரூ.1,65,150. சேமிப்புத் திட்ட முதலீடு ரூ.68,130. ரூ.20,48,000 மதிப்பிலான 320 கிராம் தங்க நகை. கோவை செலக்கரிச்சல் கிராமத்தில் ரூ.53 லட்சம் மதிப்பிலான 0.8 ஏக்கர் விவசாய நிலம். மகள் ஆராதனா பெயரில் ரூ.3,10,450 மதிப்பில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட முதலீடு.

கே.வசந்தராஜன் (பாஜக, பொள்ளாச்சி): அசையும் சொத்து மதிப்பு ரூ.84 லட்சத்து 68 ஆயிரத்து 634 ரூபாய், மனைவி பெயரில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 2 ஆயிரத்து 154 ரூபாய், தன்னை சார்ந்தவர்கள் பெயரில் சொத்து 4 லட்சத்து 70 ஆயிரத்து 486 ரூபாய்.

அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு வேட்பாளரின் பெயரில் தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.24 கோடியே 64 லட்சத்து 62 ஆயிரம் எனவும், தனது மனைவி யோகாம்பாள் பெயரில் 7 கோடியே 54 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனவும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கப்பட்ட கடன் தனது பெயரில் ரூ.1 கோடியே 64 லட்சத்து 66 ஆயிரத்து 698 எனவும், தனது மனைவி பெயரில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 960 ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா (திமுக, நீலகிரி): வங்கி இருப்பு தொகை, வைப்பு தொகை காப்பீடு, வாகனம் உட்பட அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3 கோடியே 73 லட்சத்து 2 ஆயிரத்து 894. மகள் மயூரியின் பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.2 கோடியே 88 லட்சத்து 12 ஆயிரத்து 218 உள்ளது. ராசாவுக்கு சொந்தமாக 108 பவுன் தங்கம் மற்றும் 4.182 கிலோ வெள்ளி, மகளுக்கு சொந்தமாக ரூ.1 கோடியே 93 லட்சத்து 48 ஆயிரத்து 972 மதிப்பில் தங்க நகைகள், ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர கம்மல் மற்றும் நெக்லஸ் உள்ளன.

மகள் மயூரியின் பெயரில் ரூ.15 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான 10.53 ஏக்கர் நிலம் திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ளது. பெரம்பலூரில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பரம்பரை வீடு உள்ளது. கூட்டுக் குடும்ப சொத்து ரூ.9 லட்சத்து 79 ஆயிரத்து 58 மதிப்பில் இருப்பதாகவும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் (பாஜக, நீலகிரி): மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் ரூ.1 கோடியே 1 லட்சத்து 2 ஆயிரத்து 369 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.16 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. ரொக்கம் ரூ.50,000. அவரது மனைவி கலையரசி வசம் ரூ.72000 இருப்பு உள்ளது.

டெல்லியில் உள்ள கனரா வங்கியில் அவரது பெயரில் ரூ.61 ஆயிரத்து 694 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.22 லட்சத்து 44 ஆயிரத்து 829 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மனைவி கலையரசி பெயரில் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் ரூ.7,98,515 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை இந்தியன் வங்கியில் ரூ.11 ஆயிரத்து 516 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் எல்ஐசி மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.60 லட்சத்து 38 ஆயிரத்து 846 காப்பீடு செய்துள்ளார். மனைவி கலையரசி பெயரில் எல்ஐசி மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.46 லட்சத்து 35 ஆயிரம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. முருகன் பெயரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒரு மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ. 40,000 மதிப்பிலான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது.

முருகன் பெயரில் ரூ11 லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்க நகைகளும், அவரது மனைவியிடம் ரூ.33 லட்சம் மதிப்பிலான 720 கிராம் தங்க நகைகளும் உள்ளன. முருகன் டெல்லியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். அவரது மனைவி பெயரில் சென்னையில் உள்ள அண்ணாநகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் ரூ.90 லட்சம் கடனும், மற்றொரு வங்கியில் ரூ.10 லட்சம் கடனும் பெற்றுள்ளார்.

விஜய் வசந்த் சொத்து மதிப்பு: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தின் சொத்து மதிப்பு விவரம் - அசையும் சொத்து - ரூ.48,87,89,856. மனைவி நித்யா விஜய் பெயரிலான அசையும் சொத்து ரூ.1,81,82,838. விஜய் வசந்தின் அசையா சொத்து ரூ.13,02,42,00.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x