Published : 26 Mar 2024 05:30 AM
Last Updated : 26 Mar 2024 05:30 AM

சென்னையில் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை பட்டாளம் பகுதியில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் நாற்காலியில் உட்கார்ந்தபடி வண்ணப் பொடியில் ‘குளித்த’ சமர்த்து குழந்தை. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சென்னையில் ஹோலி பண்டிகைகோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி கொண்டாடினர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை சவுக்கார்பேட்டை, பட்டாளம், வேப்பேரி உட்பட வடசென்னை பகுதியில் வாழும் வட இந்தியர்கள் கோலாகலமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

சவுக்கார்பேட்டையில் உள்ள தங்க சாலையில் வட இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் வண்ணம் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் எறிந்து வண்ணம்பூசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதுடன், வசந்த காலத்தை வரவேற்பதும் ஹோலி பண்டிகையின் நோக்கமாக இருந்து வருகிறது.

பொதுவாக பனிக்காலம் முடிந்துவெயில் காலம் மாறுவது வசந்த காலம் என்று கூறப்படுகிறது. இந்த வசந்த காலத்தில் பாக்டீரியா சார்ந்த காய்ச்சல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்கள் ஏற்படும். இதை எதிர்கொள்ளும் விதமாக ஹோலி பண்டிகை அன்று மக்கள் இயற்கையான வண்ணம் நிறைந்த பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நேற்றைய தினம் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: ஹோலி என்பது தீமையை நன்மை வென்றதன் அடையாளமாகும். சிறந்தஉணர்வுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இத்திருவிழாவை அதன்உண்மையான உணர்வோடு கொண்டாடுவோம்.

பதிலடி கொடுக்க பொம்மை துப்பாக்கியுடன்
களமிறங்கிய சுட்டிக் குழந்தை.

வண்ணங்களின் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொண்டு வந்து நமது சமூகத்தில் அமைதி, வளம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தட்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: வண்ணங்களின் திருவிழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த ஹோலி நல்வாழ்த்துகள். தீமையின் மீது நன்மையின் வண்ணமயமான வெற்றியைப் போற்றும் அதே வேளையில், திருவிழா வெகுஜனங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன்: வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் ஹோலிப்பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளத்தை உண்டாக்கும் பண்டிகையாக அமையட்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x