Published : 21 Mar 2024 02:49 AM
Last Updated : 21 Mar 2024 02:49 AM

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் - சிறு குறிப்பு

மா.சந்திரகாசன்

அரியலூர்: மக்களவையின் சிதம்பரம் ( தனி ) தொகுதி அதிமுக வேட்பாளராக மா.சந்திரகாசன் (72) அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த தாமரைபூண்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன், எம்ஏ, எல்எல்பி படித்துள்ளார். உதவி வேளாண் அலுவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

2001 - 2006 வரை செந்துறை ஒன்றிய குழுத் தலைவராக இருந்தார். தற்போது அதிமுக இலக்கிய அணியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி அம்பிகா, செந்துறை (வாா்டு -1) மாவட்டக் குழு உறுப்பினராக உள்ளார். இவரது மகன் ராஜ்குமார், மகள் மைதிலி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x