Last Updated : 20 Mar, 2024 01:09 PM

 

Published : 20 Mar 2024 01:09 PM
Last Updated : 20 Mar 2024 01:09 PM

கோவை | சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது

கோவை: கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சவப்பெட்டியுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. கோவையில் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக ஜனநாயகம் இறந்து விட்டது எனக் கூறி தான் வந்த நான்கு சக்கர வாகனத்தில் சவப்பெட்டியை கொண்டு வந்திருந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த வாகனத்தை சோதனையிட்டு சவப்பெட்டியை கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலக நுழைவாயில் நூர் முகமது சாலையில் அமர்ந்து ஜனநாயகம் இறந்து விட்டதாக கூறி கோஷம் எழுப்பினார். போலீஸார் அவரை அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கடந்த 1996-ம் ஆண்டு முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறேன். 1997-ம் ஆண்டு தேர்தலில் 6-வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்றேன். மாமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்பு மனு தாக்கல் செய்ததுள்ளேன். ஜனநாயக முறைப்படி யாரும் இல்லை, ஜனநாயகத்தில் மக்கள் வாக்களிக்க பணம் பெற்று வாக்களித்து வருகின்றனர் 42-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x