ஈரோடு மக்களவைத் தொகுதி | திமுக, அதிமுக வேட்பாளர்கள் விவரம்

கே.இ.பிரகாஷ் - திமுக (இடது), ஆற்றல் அசோக்குமார் - அதிமுக (வலது)
கே.இ.பிரகாஷ் - திமுக (இடது), ஆற்றல் அசோக்குமார் - அதிமுக (வலது)
Updated on
1 min read

ஈரோடு: மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதோடு, மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும், திமுக, அதிமுக வேட்பாளர்களின் விவரங்களைப் பற்றி பார்ப்போம்.

ஈரோடு மக்களவை தொகுதி - திமுக வேட்பாளர் விபரம்

  • பெயர் - கே.இ.பிரகாஷ்
  • முகவரி - காணியம்பாளையம், சிவகிரி, ஈரோடு.
  • வயது - 48
  • கல்வித்தகுதி - இளங்கலை (பொருளாதாரம்)
  • சமூகம் - இந்து - கொங்கு வேளாளர்
  • தொழில் - விவசாயம் மற்றும் கெமிக்கல் சார்ந்த தொழில்.
  • கட்சிப்பதவி - ஈரோடு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்தவர், தற்போது திமுக இளைஞரணியின் மாநில துணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
  • குடும்பம் - இவரது தந்தை கே.எஸ்.ஈஸ்வரமூர்த்தி, திமுகவின் ஆரம்பகால உறுப்பினர். 1977-ம் ஆண்டு முதல் இன்று வரை காணியம்பாளையம் திமுக கிளைச்செயலாளர் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி கோகிலா, மொடக்குறிச்சி ஒன்றிய திமுக கவுன்சிலராக கடந்த 2011-ம் ஆண்டு பதவி வகித்துள்ளார். திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்க்கு பி.கன்யா, பி.இனியன் என இரு குழந்தைகள் உள்ளனர்.

ஈரோடு மக்களவை தொகுதி - அதிமுக வேட்பாளர் விபரம்

  • பெயர் - ஆற்றல் அசோக்குமார்
  • வயது -54 (1970)
  • முகவரி - புதுப்பாளையம், கொடுமுடி வட்டம், ஈரோடு.
  • கல்வித்தகுதி - முதுநிலை மின் மற்றும் கணினி பொறியியல், முதுநிலை வணிக நிர்வாகம்.
  • கட்சிப் பொறுப்பு - அதிமுக ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர்
  • தொழில் - ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர், தி இந்தியன் பப்ளிக் பள்ளி குழுமம், குளோப்எடுகேட் குரூப் ஆப் ஸ்கூல்ஸ், டிப்ஸ் பள்ளி, டிப்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனக்களில் தலைவராக உள்ளார்.
  • ஆற்றல் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் மூலம், ஈரோடு மக்களவைத் தொகுதியில், மலிவு விலை உணவகம், மருந்தகம், கிராமப்புற பள்ளிகள் மற்றும் கோயில்களைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
  • குடும்பம் -ஆற்றல் அசோக்குமாருக்கு கருணாம்பிகா என்ற மனைவியும், அஸ்வின்குமார் மற்றும் நிதின்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது தந்தை ஆர். ஆறுமுகம். தாய் சவுந்தரம் முன்னாள் எம்பி ஆவார். இவரது மனைவியின் தாய் (மாமியார்) சிகே சரஸ்வதி மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக தற்போது பதவி வகித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in