Published : 15 Mar 2024 09:23 PM
Last Updated : 15 Mar 2024 09:23 PM

கிறிஸ்தவர்கள் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

ஜெருசலேம் | பிரதிநிதித்துவப் படம்

சென்னை: “தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக (இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான்) தமிழக அரசால் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மதத்தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக நிதியுதவி வழங்கும் திட்டத்தினை ஏற்கனவே உள்ள நடைமுறைகளுடன் ECS முறையில் பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x