Published : 15 Feb 2018 06:41 PM
Last Updated : 15 Feb 2018 06:41 PM

ராமேசுவரத்தில் தண்ணீர் லாரி மோதி உயிரிந்த பெண் பக்தர்: குப்பை வண்டியில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்ட அவலம்

 

தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த வெளி மாநில பெண் பக்தரின் உடலை குப்பை வண்டியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சம்பவம் ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகள், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்னி தீர்த்தக் கடற்கரையில் மாசி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட வட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதன்கிழமை இரவே ராமேசுவரம் வருகை தந்தனர்.

வியாழக்கிழமை காலையில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வட மாநில பக்தர்கள் சிலர் புனித நீராடி விட்டு உடை மாற்ற சென்று கொண்டிருந்த போது ராமநாதசுவாமி கோயில் அருகே தண்ணீர் லாரி மோதி ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ரமாமணி (54) என்ற பெண் பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு வாகனங்களும் லாரி மோதி சேதடைந்தது.

பின்னர் ராமேசுவரத்தில் அமரர் ஊர்தி இல்லை என்பதால் உயிரிழந்த ரமாமணியின் உடலை ராமேசுவரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர் வண்டியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து ஏற்படுத்திய டிரைவர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவானார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை ராமேசுவரம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமேசுவரம் தீவில் நிலத்தடி நீரை வர்த்தகப் பயன்பாட்டுக்கு எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்ததையும் மீறி லாரிகளில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு தனியார் விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விற்கப்படுவதை கண்டித்து புதன்கிழமை ராமேசுவரத்தில் 9 கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை தண்ணீர் லாரி மோதி வட மாநில பெண் பக்தர் உயிழிழந்துள்ளார். லாரியை பறிமுதல் செய்வதுடன் லாரி உரிமையாளர் மீதும் இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x