Published : 15 Mar 2024 05:40 AM
Last Updated : 15 Mar 2024 05:40 AM

சுற்றுலா விசாவில் சென்று இலங்கையில் பணிபுரிந்த 21 இந்திய இளைஞர்கள் கைது

ராமேசுவரம்: இலங்கையில் 2019-ம் ஆண்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதல், 2020-ல் பரவிய கரோனாவால் கடும்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் அந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் முற்றிலும் குறைந்தது.

இதனால், சுற்றுலாத் துறையைமேம்படுத்துவதற்கு இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இலங்கைக்கு அதிக அளவில் இந்தியர்கள் சுற்றுலா செல்வதால், இந்தியர்களுக்கு இலவச சுற்றுலா விசாவழங்கி வருகிறது. இந்த இலவசவிசா மார்ச் 31-ம் தேதி வரை அமலில்இருக்கும். அதேநேரத்தில், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி,இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் அங்கு பணிபுரிவது சட்டவிரோதமாகும்.

இந்நிலையில், சுற்றுலா விசாவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று, அங்கு பணிபுரிந்த 21 இந்திய இளைஞர்கள் நீர்கொழும்புவில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 23 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் என்றும், இவர்கள் பிப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்து தலைநகர் கொழும்பு அருகே நீர்கொழும்பு பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதைை அலுவலகமாக்கி, அங்கு `ஆன்லைன் மார்க்கெட்டிங் சென்டர்' நடத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கைதான 21 இந்திய இளைஞர்களும் கொழும்புவில் உள்ள வெலிசரா குடிவரவுத் துறை தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x