Published : 10 Mar 2024 06:22 AM
Last Updated : 10 Mar 2024 06:22 AM

வேலைவாய்ப்புக்கு உதவாத திறந்தநிலை பல்கலை. பட்டங்கள்: பிரச்சினைக்கு தீர்வு காண யுஜிசிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேலைவாய்ப்புகளுக்கு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்ற பிரச்சினைக்கு தீர்வு காண பல்கலைக்கழக மானியக்குழுவை (யுஜிசி) சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை பல்கலை.யில் உதவியாளர்களாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டங்களின் அடிப்படையில் பிரிவு அதிகாரியாகபதவி உயர்வு வழங்கப்பட்டது. பின்னர் உதவிப் பதிவாளர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு பட்டியலில் தங்களை சேர்க்கவில்லை எனக்கூறி இவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து திறந்த நிலைப்பல்கலை.களில் பட்டம் பெற்றபல்கலை. பிரிவு அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல கல்லூரிகளுக்குநேரில்சென்று பட்டம் பெற்றவர்கள்,திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது எனஎதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் திறந்தநிலைப் பல்கலை.களில் பட்டம் பெற்றவர்கள் தங்களுக்கு உதவிப்பதிவாளராக பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க இயலாது என்பதால் அந்தவழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதேநேரம் இந்த உத்தரவைக் காரணம் காட்டி அவர்களுக்கு ஏற்கெனவே பிரிவு அதிகாரியாக வழங்கப்பட்ட பதவி உயர்வு. பணப்பலன்களுக்கு இடையூறும் செய்யக்கூடாது. பொதுவாக திறந்தநிலைபல்கலைக்கழகங்களில் பெறும்பட்டங்கள் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேலைவாய்ப்புக்கு செல்லாது என அறிவிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண யுஜிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x