Published : 21 Feb 2018 09:26 AM
Last Updated : 21 Feb 2018 09:26 AM

அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

நிகழ்நேரப் பதிவு நிறைவு

9:15 PM: மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள் என்று கமல் பேசினார். முழு விவரம்

9:00 PM: மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கொடி குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். விரிவான செய்திக்கு

8.45 PM: ஊழலை ஆதரிப்பவர்கள் திராவிட கட்சிகளை ஆதரியுங்கள், கல்வி நிலையம் வேண்டும் என்பவர்கள் கமலை ஆதரியுங்கள் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார். முழு விவரம்

8.15 PM: கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து

8.00 PM: கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற தன் கட்சிக்காக மய்யம்.காம் என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளார்.  விரிவான செய்திக்கு

7:45 PM: பாரதி கிருஷ்ணகுமார், தங்கவேலு, ஞானசம்பந்தன், சுதா, சபரிராஜன், அருணாசலம், ஸ்ரீபிரியா ராஜ்குமார், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், சிவராம் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அறிவித்தார் கமல்

7:35 PM: 'மக்கள் நீதி மய்யம்' என்று கட்சியின் பெயரை அறிவித்த பிறகு, கமல் பேசி வருகிறார். முழு விவரம்

7:32 PM: கமல் தன் கட்சியின் பெயர் 'மக்கள் நீதி மய்யம்' என்று அறிவித்தார்.

7:30 PM:  மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் தனது கட்சியின் கொடியை கமல்ஹாசன் ஏற்றினார். அங்கு திரண்டிருந்த கமலின் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கட்சிக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

7:22 PM:  மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மேடையில் சினேகன் பேசி வருகிறார்.

7:20 PM:பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தார் கமல்

7:15 PM: பொதுக்கூட்டத்துக்கு வந்த கேஜ்ரிவாலை வரவேற்றார் கமல்

7:00 PM: அரவிந்த் கேஜ்ரிவால், கமல் பொதுக்கூட்ட மேடைக்கு பயணம்

6:45 PM: பொதுக்கூட்டம் செல்வதற்கு முன் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் கமல் சந்திப்பு

6:30 PM: மதுரை பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்னும் சற்று நேரத்தில் பேசுகிறார். கூட்டத்தில் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்க உள்ளார்.

6:00 Pm: மதுரை பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் தனது சொந்த ஊரான பரமக்குடி சென்ற நடிகர் கமல்ஹாசன் சிறிது நேரம் பேசினார். அப்போது, ‘‘என் மீது எவ்வளவு அன்பு வைத்து இருப்பதால் வெயிலிலும் என்னை பார்க்க காத்திருக்கிறீர்கள், இதற்கு என்ன கை மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. மதுரை கூட்டத்திற்கு நேரமாவதால் அவசரமாக செல்கிறேன்’’ என பேசினார்.

கமல் பேசுவதற்காக பரமக்குடியில் ரசிகர்கள் மேடை அமைத்து இருந்தனர். ஆனால், மதுரை பொதுக்கூட்டத்திற்கு காலதாமதமாவதால் கமல்ஹாசன் வாகனத்தில் இருந்தபடியே பேசி விட்டுச் சென்றார்.

3.00 pm: "நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் கட்சியை அறிவிக்க இருக்கிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கொள்கைகளைத் தெரிந்து கொண்ட பின்னரே மக்களுக்காக அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும்" என திருமாவளவன் கூறியுள்ளார்.

2.55 pm: கமல் பேசுவதற்காக மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவரோ காரில் இருந்தபடியே சிறிது நேரம் பேசிவிட்டு, "விழாவிற்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வர இயலவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி", என்று கூறி அங்கிருந்து மதுரை புறப்பட்டார்.

2.50 pm: நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு வந்தார். 1995-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அவர் தனது சொந்த ஊருக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.00 pm: "முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் சென்று பல சாதனைகள் படைத்தவர் நீங்கள். அந்த சாதனை அரசியலிலும் தொடரட்டும்" என நடிகர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1.30 pm: பாவ விமோசனத்துக்காக நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரம் வந்துள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.  | விரிவான செய்திக்கு |

1.15 pm: ராமநாதபுரத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" எனப் பேசினார். | விரிவான செய்திக்கு |

12.30 pm: அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு இயக்குநர் சேரன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். "புதிய எழுச்சிப்பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சார்..கொள்கை ஏற்புடனும் நம்பிக்கையுடனும் இருப்பின் எங்கள் குரல் உயரும் உங்களுக்காக" என அவர் கூறியிருக்கிறார்.

12.15 pm: கலாம் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன்

 

 

12.00 pm: கமல் மரபணு மாற்றப்பட்ட விதை; தமிழகத்தில் நாம் அதை விதைப்பதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.| விரிவான செய்திக்கு |

11.30 am: பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்துக்கு வந்தார் நடிகர் கமல்ஹாசன்.

11.00 am: அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் துவக்கியதில் எந்த அரசியலும் இல்லை. கலாம் பள்ளிக்கு செல்ல நினைத்ததிலும் எந்த அரசியலும் இல்லை. ஆனால், நான் கலாம் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது.

10.40 am: எனது கொள்கைகளை மக்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துரைப்பேன். | விரிவான செய்தி |

10.30 am: மீனவர் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது என் கடமை: கமல்ஹாசன்

10.15 am:  "இன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்கக், களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள்" என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

10.10 am: நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார். | விரிவான செய்திக்கு |

10.05 am: அரசியல் களம் மாபெரும் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார். கமல்ஹாசன் அரசியல் பயணத்துக்கு அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.| விரிவான செய்திக்கு |

 

10.00 am: மீனவர்களுடன் ஆலோசனையைத் தொடங்கினார் கமல்ஹாசன்.

 

9.40 am: கமல் அரசியல் பயணத்துக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் ஸ்நேகன் ராமேஸ்வரம் வந்துள்ளார்.

 

 

9.30 am: காலை 10 மணியளவில் மீனவர்களை சந்திக்கிறார் கமல்ஹாசன்.

9.30 am: கலாம் பள்ளிக்கு செல்லாமல் என்னை தடுத்ததில் அரசியல் உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு கலாம் பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறேன் என கமல்ஹாசன் கூறினார்.

9.15 am: "பெரிய விஷயங்கள் எளிமையாக தொடங்குகின்றன. எளிமையில் இருந்துதான் உயர்வு பிறக்கும். எனது பயணத்தை ஒரு மாமனிதரின் எளிமையான இல்லத்திலிருந்து தொடங்கியதில் பெருமகிழ்ச்சி" என மற்றுமொரு ட்வீட்டில் கூறியிருக்கிறார். | விரிவான செய்திக்கு |

9.00 am: "பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்" என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.

7.30 am: கலாம் வீட்டில் கமல்

தொடர்ந்து இன்று காலை 7.30 மணியளவில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வீட்டுக்கு கமல்ஹாசன் சென்றார். அங்கு அப்துல் கலாமின் சகோதரர், அவரது மனைவி, அவர்கள் மகன் சலீம் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து பேக்கரும்பில் உள்ள நினைவிடத்துக்கும் செல்கிறார். பின்னர் மீனவர்களைச் சந்திக்கிறார்.

 

 

7.15 am: கலாம் படித்த பள்ளிக்கு செல்ல அனுமதி மறுப்பு

மண்டபத்தில் உள்ள அப்துல் கலாம் படித்த பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் நோக்கத்துடன் கமல் வருவதால் பள்ளிக்கு செல்ல அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து கலாம் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாட கமல்ஹாசனுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.அப்பள்ளி முன்பாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கலாம் படித்த பள்ளி முன்பாக கமல்ஹாசன் வாகனம் வந்தபோது அதில் நின்றபடியே ரசிகர்களை பார்த்து கை அசைத்துவிட்டு கமல்ஹாசன் சென்றார்.

இன்று மாலை பொதுக்கூட்டம்:

கமல்ஹாசன் புதிதாக கட்சி தொடங்க உள்ளார். இதற்காக மதுரையில் இன்று (புதன்கிழமை) மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஒத்தக்கடையில் மேடை உள்ளிட்ட பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.

இதற்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்த அவரை வரவேற்க காலை 10 மணி முதலே ரசிகர்கள் விமான நிலையத்தில் திரளத் தொடங்கினர். பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x