Published : 01 Mar 2024 09:05 AM
Last Updated : 01 Mar 2024 09:05 AM

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி.

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி: தனது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார். அதைத்தொடர்ந்து, சிஐடி காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு செல்லும் முதல்வர், அங்கு கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

பின்னர், சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் காலை உணவு முடித்துவிட்டு, அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x