Published : 06 Feb 2018 09:03 AM
Last Updated : 06 Feb 2018 09:03 AM

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர் 225 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்களான திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் கள் எஸ்.காமராஜ், எம்.ராஜேந்திரன், மன்னார்குடி முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன் உள்ளிட்ட 225 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் மாவட்ட வாரியாக நீக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 2,500-க்கும் மேற்பட்டவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எம்பிக்கள், முன் னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்களும் அடக்கம்.

இந்நிலையில், நேற்று திருவாரூர் மாவட்ட அதிமுகவில் இருந்து 225 பேர் நீக்கப்பட்டதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர்கள் எஸ்.காமராஜ், எம்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஜெ.இளவரசி இளையராஜா, மன்னார்குடி முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.சத்தியமூர்த்தி, மன்னார்குடி நகர செயலாளர் ஏ.டி.மாதவன், தலைமைக்கழக பேச்சாளர்கள் திருநாகேஸ்வரம் ஜலீல், இருள்நீக்கி பி.சேகர் உள்ளிட்ட 225 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அதிமுகவினர் எவ்வித தொடர் பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x