Published : 20 Feb 2018 04:23 PM
Last Updated : 20 Feb 2018 04:23 PM

பேசும் படம்: அரசியல் களம்; பாரதி- கமல், அப்துல் கலாம் - ரஜினி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் நடிகர்கள் கமல், ரஜினி தங்களது அரசியல் வருகையை அறிவித்துள்ளனர். அவ்வப்போது அரசியல் சார்ந்து தங்கள் கருத்தை தெரிவித்தும் வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில்  கட்சிக் கொடியையும், கட்சிப்பெயரையும் அறிவித்து தனது அரசியல் சுற்றுப் பயணத்தை கமல்ஹாசன் நாளை  தொடங்க இருக்கிறார்.

ரஜினியைப் பொருத்தவரை தற்போது அரசியல் சார்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை 10 மாவட்டங்களுக்கு முழுமையான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துவிட்டு 10 நாட்கள் ரிஷிகேஷில் தங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரஜினி, கமல் அரசியல்  சார்ந்த சுவரொட்டிகள் பரவலாகக் காணப்படுகின்றன. இரு நடிகர்களின்  ரசிகர்களும் அவர்களது ரசிகர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

பாரதியார் உருவத்தில் கமலும், அப்துல் கலாம் உருவத்தில் ரஜினியும் உள்ள சுவரொட்டிகள் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையை அலங்கரித்துள்ளன.

 

படம்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x