Published : 10 Feb 2024 07:04 AM
Last Updated : 10 Feb 2024 07:04 AM

மயிலாப்பூரில் பாஜக அலுவலகத்துக்கு சீல்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் பாஜக அலுவலகத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மக்களவை தேர்தலையொட்டி பாஜக தென் சென்னை மாவட்டம் சார்பில் நேற்று முன்தினம் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியின் மக்களவை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

மயிலாப்பூர் ஆர்‌.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தென் சென்னை மக்களவை பொறுப்பாளர் ராஜா தலைமையில், மயிலாப்பூர் தொகுதியின் மக்களவை தேர்தல் அலுவலகம் பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால் அதனை இந்து சமய அறநிலைத்துறை சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x