Published : 12 Feb 2018 10:10 AM
Last Updated : 12 Feb 2018 10:10 AM

ஆசிரியர் பணி நியமனத்தில் அலட்சியம், முறைகேடு: தமிழக அரசுக்கு தினகரன் கண்டனம்

ஆசிரியர் பணி நியமனத்தில் அலட்சியம், முறைகேட்டைப் பின்பற்றும் அரசுக்கு டிடிவி. தினகரன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 94 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும்போது, தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேர்ச்சி பெற்றும் மனஅழுத்தம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வாரத்துக்குள் இதுகுறித்து அரசாணை வெளியிடப்படும் என்று கடந்த மாதம் 29-ம் தேதி அளித்த உறுதிமொழி இதுவரை செயல்வடிவம் பெறவில்லை. இது, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. இந்நிலையில், அரசு எந்த முடிவையும் அறிவிக்காததால் 94 ஆயிரம் பேரும் அச்சத்தில் உள்ளனர். அரசோ மிகுந்த அலட்சியத்தோடு கையாள்கிறது.

எனவே, 2013-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டு, அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிலைநாட்டிய தமிழ்நாட்டின் பெருமை, சிறப்பு என அனைத்தையும் அரசு சிதைத்துவிட்டது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்

முறைகேடு காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது. இது, நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது. அரசின் நியமனங்களிலும், தேர்வுகளிலும் நடைபெறும் முறைகேடுகளுக்கும் முடிவு, இந்த ஆட்சி அகலும் நாளில்தான் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x