சென்னையில் ஒரே நாளில் 118 பேருக்கு டெங்கு

சென்னையில்  ஒரே நாளில் 118 பேருக்கு டெங்கு
Updated on: 
1 min read

சென்னை: தமிழக சுகா​தா​ரத்​ துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்​சலால் 25,585 பேர் பாதிக்​கப்​பட்​டனர்.

இந்த ஆண்டு இது​வரை 23,241 பேர் டெங்கு பாதிப்​புக்கு ஆளாகி​யுள்​ளனர். சென்னையில் அக்​டோபர் 13-ம் தேதி 118 பேர் டெங்​கு​வால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் டெங்கு காய்ச்​சல் கட்​டுக்​குள் உள்​ளது. டெங்​குவை கட்​டுப்​படுத்த தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் அரசு எடுத்து வரு​கிறது. மாநக​ராட்சி மருத்​து​வ​மனை​கள், அரசு ஆரம்ப சுகா​தார மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​கள் போதிய அளவில் உள்​ளனர்.

சென்னையில்  ஒரே நாளில் 118 பேருக்கு டெங்கு
சாலையில் இனி குப்பை சிதறாது, துர்நாற்றம் வீசாது: பிரத்யேக கேப்சூல் வடிவ கன்டெய்னரில் கொண்டு செல்ல திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in