சாலையில் இனி குப்பை சிதறாது, துர்நாற்றம் வீசாது: பிரத்யேக கேப்சூல் வடிவ கன்டெய்னரில் கொண்டு செல்ல திட்டம்

சென்னை என்விரோ நிறுவனம் நடவடிக்கை
புளியந்தோப்பில் அமைக்கப்பட்டு வரும் பிரத்யேக குப்பை மாற்று நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நவீன கேப்சூல் வடிவ கன்டெய்னர்கள். | படம்: ச.கார்த்திகேயன் |

புளியந்தோப்பில் அமைக்கப்பட்டு வரும் பிரத்யேக குப்பை மாற்று நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நவீன கேப்சூல் வடிவ கன்டெய்னர்கள். | படம்: ச.கார்த்திகேயன் |

Updated on: 
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் வீடு​கள் மற்​றும் குப்​பைத் தொட்​டிகளில் இருந்து சேகரிக்​கப்​படும் குப்​பைகள் காம்​பாக்​டர் வாக​னங்​கள் மூலம் குப்பை மாற்​றும் நிலை​யத்​தில் கொட்​டப்​படும்.

பிறகு அங்​கிருந்து கனரக வாக​னங்​கள் மூலம் கொடுங்​கையூர், பெருங்​குடி​யில் உள்ள குப்பை கொட்​டும் வளாகங்​களுக்கு கொண்டு செல்​லப்​படும். இக்​குப்​பைகள் வழிகளில் சிதறுவ​தால் ஏற்​படும் துர்​நாற்​றம் மற்​றும் சுகா​தார சீர்​கேட்​டால் சாலைகளை ஒட்​டிய குடி​யிருப்​பு​வாசிகளும், வாகன ஓட்​டிகளும் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

தற்​போது மாநகரின் பெரும்​பாலான மண்​டலங்​களில் தனி​யார் மூலம் தூய்​மைப் பணி மேற்​ கொள்​ளப்​படு​கிறது. வட சென்​னை​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர், மணலி உள்​ளிட்ட மண்​டலங்​களில் சென்னை என்​விரோ சொல்​யூஷன் நிறு​வனம் தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​கிறது.

இந்​நிறு​வனம் குப்​பையை கொண்டு செல்​லும்​போது சிதறு​வது, துர்​நாற்​றம் வீசுவதற்கு முற்​றுப்​புள்ளி வைக்க சுமார் ரூ.35 கோடி​யில் புதிய திட்​டத்தை செயல்​படுத்தி வரு​கிறது.

அதன்​படி, பிரத்​யேக கேப்​சூல் வடிவ கன்​டெய்​னர்​களில் குப்​பையே வெளி​யில் தெரி​யாத​வாறு மூடிய நிலை​யில் கொண்டு செல்ல திட்​ட​மிட்​டுள்​ளது. மேலும் குப்​பைகளை அழுத்​தி, அதிக அளவில் இந்த கேப்​சூல்​களில் கொண்​டு​செல்​லப்பட உள்​ளது.

இதற்​காக பிரத்​யேக குப்பை மாற்று நிலை​யத்தை புளியந்​தோப்​பில் என்​விரோ நிறு​வனம் அமைத்து வரு​கிறது. அங்​கிருந்து குப்​பைகளை வெளி​யில் கொண்டு செல்ல 10 நவீன லாரி​கள், நிலை​யத்​துக்​குள் இயக்க 2 லாரி​கள் என மொத்​தம் 12 லாரி​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன.

இதில், 40 கேப்​சூல்​கள் அன்​றாட பயன்​பாட்​டுக்​கும் 8 கேப்​சூல்​கள் இருப்​பில் வைக்​கப்​பட​வும் உள்​ளன. நிலை​யத்​துக்கு வரும் குப்​பைகளை 4 நவீன அழுத்​தும் இயந்​திரங்​கள் மூலம் மணிக்கு தலா 35 டன் வீதம் 140 டன் குப்​பைகளை கேப்​சூல்​களில் அடைக்க முடி​யும்.

24 கனமீட்​டர் கொள்​ளளவு கொண்ட இந்த கன்​டெய்​னர்​களில் 14 டன் குப்​பைகளை அடைக்க முடி​யும். இந்​நிலை​யம் தின​மும் 840 டன் குப்​பைகளை கையாளும் திறன் கொண்​டது.

இந்த நவீன திட்​டத்​தால் குப்பை மாற்​றும் நிலை​யம் மற்​றும் குப்பை கொட்​டும் வளாகம் இடையே இயக்​கப்​படும் லாரி நடைகள் குறை​யும். மேலும் போக்​கு​வரத்து நெரிசல், வாக​னப்​புகை வெளி​யேற்​ற​மும் குறை​யும். இத்​திட்​டம் விரை​வில் பயன்​பாட்​டுக்கு வரவுள்​ளது.

<div class="paragraphs"><p>புளியந்தோப்பில் அமைக்கப்பட்டு வரும் பிரத்யேக குப்பை மாற்று நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நவீன கேப்சூல் வடிவ கன்டெய்னர்கள். | படம்: ச.கார்த்திகேயன் |</p></div>
ஆவடி | போலி ஆன்லைன் வர்த்தக விளம்பரம் மூலம் ரூ.6 கோடி கட்டணம் பெற்று ஏமாற்றிய 3 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in