Published : 26 Apr 2014 09:01 AM
Last Updated : 26 Apr 2014 09:01 AM

நெட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: சென்னை பல்கலை. ஏற்பாடு

சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி மைய இயக்கு நர் ஜி.ரவீந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது:

ஜூன் மாதம் நடைபெறவுள்ள யுஜிசி, சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித் தேர்வுக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பை மே 1 முதல் ஜூன் 15-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 9-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை சேப்பாக்கம், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி மைய அலுவலகத்தை 044-25399518 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x