Published : 06 Jan 2024 12:55 AM
Last Updated : 06 Jan 2024 12:55 AM

உலக முதலீட்டாளர் மாநாடு 2024: மாநாட்டின் சிறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது.

“உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடங்கவுள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நமது ‘Titans Of Tamil Nadu’ (தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்கள்) மற்றும் One Trillion Dreams (ஒரு ட்ரில்லியன் கனவுகள்) ஆகிய பரப்புரைகள் பரவலான ஆர்வத்தை ஏற்படுத்தியது. 450-க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், உலகப்புகழ் பெற்ற 170 பேச்சாளர்கள், 50 உலக நாடுகளின் பங்கேற்பு என உலக முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தின் தொழில் திறத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும்.

தலைமைப் பண்பு குறித்த 26 அமர்வுகள், குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான காட்சியரங்குகள், தமிழகத்தின் தொழிற் சூழலுக்கான காட்சியரங்குகள், பல்வேறு உலக நாடுகளுக்கான காட்சியரங்குகள், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு காட்சியரங்குகள் என எங்கள் மாநிலத்தின் விந்தையைக் காணவும்; தொழில் கூட்டிணைவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு அற்புதமான வாய்ப்பினை இம்மாநாடு வழங்கும்.

தமிழகத்தின் தொழில் மரபைக் கொண்டாடி இம்மாநிலம் வழங்கும் எல்லையற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள எங்களோடு இணையுங்கள்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x