Published : 23 Jan 2018 09:23 AM
Last Updated : 23 Jan 2018 09:23 AM

பஸ் கட்டணத்தை குறைக்க நெடுமாறன் யோசனை

ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினால் பஸ் கட்டண உயர்வுக்கு அவசியம் வராது என தமிழர் தேசிய இயக்கத் தலை வர் பழ.நெடுமாறன் கூறினார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக அரசு, பேருந்து கட்டணத்தை உயர்த்தியது நியாயமல்ல. ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினால் கட்டண உயர்வுக்கு அவசியமில்லை. தனியாரிடம் இருந்து பேருந்துகளை அரசு எடுத்துக் கொண்டது மக்களுக்கு சேவை செய்யவே. டீசல் மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தினால், பேருந்து கட்டண உயர்வை குறைக்க முடியும்.

நீட் தேர்வில், மாநில பாடத்திட்டத்தில் படிப்போருக்கு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் கேள்வி கேட்பது நியாமல்ல.

தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு அத்துமீறலாகும். புதுச்சேரி ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார். ஆளுநர் செயலால் அரசியல் சட்டமே செயலற்றுப் போகும். இலங்கையில் தமிழர்களின் நிலை இன்னும் மோச மாக உள்ளது.

ஜனநாயகத்தில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யாரை ஏற்பது என மக்கள்தான் முடிவு செய்வர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x