Published : 29 Jan 2018 08:46 AM
Last Updated : 29 Jan 2018 08:46 AM

தாம்பரம் ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் படிக்கட்டில் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்: பயணிகள் மத்தியில் வரவேற்பு

தாம்பரம் ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் படிக்கட்டில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஸ்டிக்கர் கள் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

தாம்பரம் ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் உள்ள படிக்கட்டுகளில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர் கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் இந்த வாசகங்கள் உள்ளன. ‘இந்தியாவின் தூய்மையே இந்தியாவின் ஆரோக்கியம்’, ‘இயற்கையை காப்போம் அது நம்மை காக்கும்’, ‘பாதுகாப்பு விதிகள் உங்கள் சிறந்த கருவிகள்’, ‘மரங்களை வளர்ப்போம், வனங்களை காப்போம்’, ‘பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்’, ‘தேசத்தை சுத்தமாக வைத்திருப்பது நம் கடமை’, திறந்த வெளி கழிவறையைத் தவிர்க்க வேண்டும்’, ‘தெய்வத்துக்கு அடுத்தது தூய்மை’ என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

படிக்கட்டில் ஏறிச் செல்லும் பயணிகள் சில நொடிகள் நின்று, இந்த வாசகங்களை படித்துச் செல்கின்றனர். இந்த விழிப்புணர்வு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தை வலியுறுத்தி ரயில்வே சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை ரயில்வே நடைமேடைகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழங்குகின்றனர். ‘டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் குற்றம்’, ‘படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது’, ‘எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது’, ஜன்னல் ஓரமாக அமரும் பயணி கள் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’, ‘செல்போன் பேசியபடி ரயில்பாதையை கடக்கக் கூடாது’ போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x