மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் எண் அறிவித்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி

படம்: என்.ராஜேஷ்
படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி: வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம்.

மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம். தொடர்பு எண்: +91 80778 80779” எனப் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93 செ.மீ அளவுக்கு அதி கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. திருச்செந்தூரில் 67 செ.மீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61 செ.மீ மழையும் பெய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in