Published : 16 Dec 2023 04:45 PM
Last Updated : 16 Dec 2023 04:45 PM

“வெள்ள நிவாரணமாக குறைந்தது ரூ.10,000 வழங்க வேண்டும்” - அண்ணாமலை

அண்ணாமலை

சென்னை: “வெள்ள நிவாரணமாக மக்களுக்குக் குறைந்தது ரூ.10,000 ஆவது வழங்க வேண்டும். மாநில அரசை மத்திய அரசின் அதிகாரிகள் விமர்சனம் செய்ய மாட்டார்கள். அது ஒரு மாண்பு. திமுக செயல் இழந்து நிற்கிறது. அவர்கள் மோசமாகப் பேரிடர் காலத்தைக் கையாண்டு இருக்கிறார்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “மத்திய அரசின் அதிகாரிகள், மாநில அரசை விமர்சனம் செய்ய மாட்டார்கள். அது ஒரு மாண்பு. தமிழகத்தில் திமுக செயல் இழந்து நிற்கிறது. பேரிடரை மோசமாகக் கையாண்டுள்ளது. மத்திய அரசு சார்பில் வந்த நான்கு அதிகாரிகள் கொடுத்த சான்றிதழை அறிக்கையாகக் கொடுத்திருக்கிறார்கள். திமுக அரசு பேரிடர் காலத்தை மோசமாகக் கையாண்டதை முதல்வர் ஒப்புக்கொள்ள வேண்டும். வெள்ள நிவாரணமாக மக்களுக்குக் குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும். பொலிடிக்கல் இம்மெச்சூரிட்டியை தமிழகத்தில் முதன்முறையாகப் பார்க்கிறேன். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி நிச்சயமாக வந்துசேரும்.

ஊடகம், காட்சிகள் பொய் சொல்லாது, மக்களுடைய பேட்டி பொய் சொல்லாது. ஐந்து நாட்களாகத் தண்ணீரிலிருந்தவர்கள் பொய் கூற மாட்டார்கள். நாங்களும் பொய் சொல்ல மாட்டோம். தமிழகத்தில் திமுக செயல் இழந்து நிற்கிறது. பாஜகவை விடப் பழமையான கட்சி திமுக. ஆனால், மன்னர் தேரில் செல்வது போல் திமுகவில் உள்ளவர்கள் பேரிடரில் மக்களைக் காணச் சென்றார்கள். ஆனால், இந்தப் பேரிடர் சமயத்தில் படகிலும், கழுத்தளவு தண்ணீரிலும் ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டரும் சென்று மக்களுக்கு உதவியிருக்கிறார்கள். திமுக அரசு பாஜகவைக் குறை கூறுகிறது என்றால் நாங்கள் வளர்ந்து விட்டோம் என்று அர்த்தம். மக்களுக்குத் தேவையான இடங்களில் நாங்கள் நிற்கின்றோம் என்று அர்த்தம்.

குறை சொல்வது அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வேலை கிடையாது. அதிகாரிகள் அரசியல் பேசக் கூடாது. அதிகாரிகளின் கருத்துடன் நான் உடன்படவில்லை. ராஜ்நாத் சிங் அமைச்சரோ, பிரதமரோ அரசியல் பேச மாட்டார்கள். எந்த மாநிலத்தையும் அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், திமுக கோட்டை விட்டதை மறைக்க முடியாது. சேதத்தைக் கணக்கிடுவதற்கு மட்டுமே அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்தனர். ஆனால், முழு சேதத்தை அவர்கள் இன்னும் கணக்கிடவில்லை” என்று அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x