Published : 12 Jan 2018 09:34 AM
Last Updated : 12 Jan 2018 09:34 AM

3 அடிப்படை சுகாதார பழக்கங்களை கடைபிடித்து தூய்மையாக இருந்தால் நோய்களிலிருந்து தப்பலாம்: விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது இந்துஸ்தான் யூனிலீவர்

பிள்ளைகளிடையே தூய்மை பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் நோய்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தொடங்கியுள்ளது. நடிகை கஜோல் தேவ்கன் மூலம் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட் டுள்ளது.

மத்திய அரசு தொடங்கியுள்ள 'ஸ்வச் ஆதாத்', 'ஸ்வச் பாரத்' இயக்கங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்படுகிறது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு சிறார்கள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். கைகளை சோப்பு போட்டு கழுவுவது, தூய்மையான தண்ணீரை பருகுவது, சுத்தமான கழிப்பறையை பயன்படுத்துவது போன்ற அடிப்படையான சுகா தார பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் இதனை தவிர்க்க முடியும்.

உலக சராசரி அளவை விட அதிகமாக இந்தியாவில் 38 சதவீதம் பேர் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிள்ளைகள் சுறுசுறுப்பு இல்லாமலும், அறிவாற்றல் குறைந்தும் காணப்படுகின்றனர்.

அடிக்கடி உடல் நலம் இல்லாமல் போவதால் சிறார்கள் தங்கள் குழந்தைப் பருவ மகிழ்ச்சியை எப்படி இழக்கிறார்கள் என்பது சிறு சிறு கதைகள் மூலம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத் தப்படும்.

குழந்தைகள் இவ்வாறு அடிக் கடி பாதிக்கப்படாமல் இருந்தால் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது மட்டுமின்றி, நாடும் அதனால் விளையும் உண்மையான பலனை பெற முடியும்.

இது குறித்து இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்ஜீவ் மேத்தா கூறும்போது,

"நாட்டில் 90 சதவீதத்துக்கும் மேலானோர் இந்துஸ்தான் யூனிலீவர் பொருட்களை வாங்குகின்றனர். அரசின் முயற்சிகளுக்கு எங்களைப் போன்ற பெரிய நிறுவனங்கள் உதவுவது அவசியமாகும். எங்கள் முயற்சி பலன் அளிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x