Published : 09 Dec 2023 12:27 PM
Last Updated : 09 Dec 2023 12:27 PM

நீர்வரத்து அதிகரிப்பால் வேகமாக நிரம்பும் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையொட்டி, கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், அணைக்கு கணிசமாக நீர்வரத்து கிடைத்து வருகிறது. கடந்த 10 நாட்களில் அணையின் நீர் மட்டம் 75 அடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 2-ம் தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்தது. குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக ஆற்றிலும், பிரதான வாய்க்காலிலும் விநாடிக்கு 1200 கன அடி திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 500 கன அடி வீதம் நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதால், நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அணை அதன் முழு கொள்ளளவான 90 அடியை விரைவில் நெருங்கும். எனவே, கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்'’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x