Published : 26 Jan 2018 11:37 AM
Last Updated : 26 Jan 2018 11:37 AM

பன்மடங்கு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பன்மடங்கு வரி உயர்வை தமிழக அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நிறைவடைந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சிகளில் வரியை எந்த முகாந்திரமும் இல்லாமல் பலமடங்கு உயர்த்தியுள்ளது. கட்டிய வீட்டுக்கு ரூ.240 என்பதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தியுள்ளனர். அதுவும் 2009 முதல் பின்தேதியிட்டு வரும் மார்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டும். இந்த அநியாய வரி உயர்வை தமிழக அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் திரும்பப் பெற வேண்டும்.

மக்களின் உணர்வுகளை மதித்து உயர்த்தப்பட்டுள்ள பேருந்துக் கட்டணத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். கட்டண உயர்வை எதிர்த்துப் போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

ஜனநாயக ரீதியாகப் போராடுபவர்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x