தமிழகத்தில் மணல் விற்பனையில் பெரிய அளவில் ஊழல்: பாஜக குற்றச்சாட்டு

சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம். 
சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம். 
Updated on
1 min read

சேலம்: ‘அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் பெரிய அளவில் தமிழகத்தில் ஊழல் நடந்துள்ளது,’ என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெருங்கோட்ட பூர்ணசக்தி கேந்தர பொறுப்பாளர்கள் மாநாடு புதன்கிழமை நடந்தது. இதில், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியது: "இந்தியா முழுவதும் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமை ஏற்று பிரதமர் வேட்பாளாராக நரேந்திரமோடி போட்டியிடுவார். மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை பிரதமர் மோடி வேண்டுமா? வேண்டாமா என்பது தான். பாஜக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தொடர்வார்.

அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம், அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என தமிழக அரசு கூறுவது எந்த வகையில் நியாயம். மாநில அரசு தான் தவறு செய்துள்ளது. இதை விசாரிக்கும் உரிமை அமலாக்கத்துறைக்கு உண்டு. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிக அளவில் தவறு செய்திருக்கிறார் என்பதாலேயே நீதிபதிகள் அவருக்கு இன்னும் ஜாமீன் வழங்காமல் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in